×

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா கல்லூரியில் மதுவிலக்கு விழிப்புணர்வு முகாம்

நெல்லை, ஜன. 1: மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர்   கல்லூரியில் என்எஸ்எஸ் சார்பில் விழிப்புணர்வு முகாம்  நடந்தது. மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர்  கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மதுவிலக்கு மற்றும் மகளிர் எதிர்கொள்ளும் சமுதாயச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி தலைவர் செய்யது அகமது தலைமை வகித்து பேசினார். தாளாளர் குதா முகம்மது முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ரஜப் பாத்திமா வரவேற்றார். கல்லூரி பொருளாளர் ஜாபர் சாதிக் வாழ்த்திப் பேசினார். நெல்லை மாநகர மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி சிறப்புரை ஆற்றினார். முகாமில் பேராசிரியர்கள், மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராமலட்சுமி நன்றி கூறினார்.

Tags : Annai ,Hajira College ,Melappalayam ,
× RELATED நல்லன எல்லாம் தரும் நாராயண மந்திரம்!