×

கத்தாளம்பட்டியில் பாரம்பரிய உணவு திருவிழா

திருச்சுழி, ஐன. 1: திருச்சுழி அருகே உள்ள கத்தாளம்பட்டியில் பாரம்பரியமான உணவு குறித்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பணிகள் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. மாவட்ட திட்ட அலுவலர் ராஜம் தலைமை வகித்தார். திருச்சுழி ஒன்றிய பெருந்தலைவர் பொன்னுத்தம்பி முன்னிலை வகித்தார். மேலும் பாரம்பரிய உணவின் அவசியம் பற்றியும், தற்போதுள்ள உணவு முறைகள் பற்றியும் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் பற்றி வட்டார உணவு பாதுகாப்பு போஸ் பேசினார். விருதுநகர் மாவட்ட புள்ளியியல் ஆய்வாளர் மதிவாணன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில், குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் நிலை1 மற்றும் 2, ஒருங்கிணைப்பாளர்கள், வட்டாரத் திட்ட உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Traditional Food Festival ,Kathalambatti ,
× RELATED சாத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!