அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி துவக்கம்

விருதுநகர், ஜன. 1: விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தகவல்: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் திறனை மேம்படுத்தும் வகையில் ‘காபி வித் கலெக்டர்’ என்ற புதிய நிகழ்ச்சி துவங்க உள்ளது. 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஒன்றியத்திற்கு தலா 15 மாணவ, மாணவியர் வாரம் ஒருமுறை தேர்வு செய்யப்படுவர். தேர்வான மாணவ, மாணவியரை நேரில் அழைத்து கலெக்டர் உரையாடல் நடத்த உள்ளார். மாணவர்களை ஊக்கப்படுத்துவதுடன், நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையிலும், எதிர்கால வாழ்க்கை கனவை உருவாக்கும் வகையில் நிகழ்ச்சி அமையும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: