ஆண்டிபட்டி தாலுகாவில் 10 இடங்களில் தற்காலிக ‘போலீஸ் செக்போஸ்ட்’ புத்தாண்டு கொண்டாட்டங்கள் கண்காணிப்பு

ஆண்டிபட்டி, ஜன. 1: ஆண்டிபட்டி தாலுகாவில் புத்தாண்டு கொண்டாட்ட அத்துமீறல்களை தடுக்க, 10 தற்காலிக சோதனைச்சாவடிகளை போலீசார் அமைத்து கண்காணித்து வருகின்றனர். உலகெங்கும் ஒமிக்ரான் அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சானிடைசர் பயன்படுத்துதல் ஆகியவற்றை கட்டாயமாக்கி அறிவித்துள்ளது. இந்நிலையில், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு முக்கிய சுற்றுலாத் தலங்களை மூடுவதற்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, பிரச்சனைகள் ஏற்படாதவாறு தவிர்க்கவும், விபத்துகளை தடுக்கவும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்ககா தேனி மாவட்டத்தில் 93 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைக்க எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவிட்டார். இதன்படி ஆண்டிபட்டி தாலுகாவில் கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்ட், கணவாய் மலைப்பகுதியில் செக்போஸ்ட், ராஜதானி செல்லும் பகுதியில் குப்பாம்பட்டி விலக்கு, வைகை அணைப் பகுதி, க.விலக்கு பகுதி, ஏத்தக்கோவில், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட 10 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தேவையில்லாமல் சுற்றித்திரிவோர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் ஆகியோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Related Stories: