×

காரைக்குடியிலிருந்து மதுரைக்கு புதிய ரயில் தடம் உருவாக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருப்புவனம், ஜன. 1: காரைக்குடியிலிருந்து திருப்புத்தூர், மேலூர் வழியாக மதுரைக்கு புதிய  ரயில் தடத்தை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே மடப்புரத்தில் டிச.29,30 ஆகிய தேதிகளில் இம்மாநாடு நடைபெற்றது. மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்டராமன், மாநிலக்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளராக ஆர்.கே.தண்டியப்பன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக வீரபாண்டி, கருப்புச்சாமி, மோகன், ஆறுமுகம், மணியம்மா, சேதுராமன், சுரேஷ் ,ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் பிர்கா வாரியாக நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு பதிவு செய்து கிடைக்காத அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும். சிவகங்கை அருகே 900 ஏக்கர் பரப்பளவில் கிடைத்த வருகிற கிராபைட் கனிமத்தை பயன்படுத்தி ஒரு லட்சம் கோடி ரூபாயில் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும். காரைக்குடியிலிருந்து திருப்புத்தூர், மேலூர் வழியாக மதுரைக்கு புதிய  ரயில் தடத்தை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Marxist ,Party District ,Conference ,Karaikudi ,Madurai ,
× RELATED சிறப்பு குழு ஆளுநரை தேர்வு செய்யும்:...