காரைக்குடி, ஜன. 1: காரைக்குடி மதர் சிறப்பு பள்ளி மாணவர்களுடன் ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சங்கம் சார்பில் புதுவருட கொண்டாட்டம் நடந்தது. பள்ளி நிர்வாகி அருண் வரவேற்றார். சங்க தலைவர் திஷாந்த்குமார், செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் காரைமுத்துக்குமார், நாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பள்ளி மாணவர்கள் சித்தன்னவாசலுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.