சின்னாளபட்டி பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

சின்னாளபட்டி, ஜன. 1: சின்னளபட்டியில் மெயின்ரோட்டு பிரிவிலிருந்து, பஸ்நிலையம் வரை சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சின்னாளபட்டி பேரூராட்சியில் மெயின்ரோடு பிரிவிலிருந்து கஸ்தூரிபா சாலை வழியாக பூஞ்சோலை மற்றும் பேருந்து நிலையம் வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள், டூவீலர்களில் வருவோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கஸ்தூரிபா மருத்தவமனை முன்பு பேக்கரி எதிரே ஆக்கிரமிப்பால் பேருந்துகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தவிர பாரதிநகர் பகுதியில் சாலையோரக் கடைகாரர்கள், கடைகளுக்கு முன்புறம் 15 அடி நீளத்திற்கு தாழ்வாரங்களை நீட்டித்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால், இரவு நேரங்களில் டூவீலர்களில் வருவோர், எதிரே வரும் வாகனங்களில் மோதும் அபாயம் உள்ளது. கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், பேரூராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி துறை அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: