×

நத்தம் பகுதியில் தொடர் சாரலால் மா சாகுபடியில் மருந்து தெளிக்கும் பணி சுணக்கம் விவசாயிகள் கவலை

நத்தம், ஜன. 1: நத்தம் பகுதிகளில் காசம்பட்டி, புன்னப்பட்டி, துவராபதி, வத்திபட்டி, சமுத்திராபட்டி, சிறுகுடி, செந்துறை, குட்டுப்பட்டி, மணக்காட்டூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் மாந்தோப்புகள் உள்ளன. இவைகள் ஆண்டுக்கு ஒரு தடவை மட்டும் மகசூல் தரும். இவற்றில் மார்கழி மாதம் தொடக்கத்திலிருந்தே இரவில் அதிகமாக பெய்யும் பனி மற்றும் பகலில் அதிகமாக காணப்படும் வெயில் போன்ற உகந்த சூழ்நிலையைக் கொண்டு மா விவசாயிகள் மாமரங்களில் பூக்கள் பூப்பதற்கான மருந்து தெளிக்கும் பணியை மும்முரமாக மேற்கொண்டு வந்தனர். திடீரென நேற்று முன்தினம் இரவு முதல் நத்தம் பகுதிகளில் சாரல் மழை அவ்வப்போது தொடர்ந்து பெய்து வருவதால், மாமரங்களில் மருந்து தெளிக்கும் பணியை விவசாயிகள் நிறுத்தியுள்ளனர். இதனால், இந்த பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாரல் மழை என்பது முற்றிலுமாக நின்று வெயிலும் பனியும் மீண்டும் ஏற்படும் வரை பணிகளை செய்ய முடியாது என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : Natham ,
× RELATED நத்தம் மீனாட்சிபுரத்தில்...