கிழக்கு-வடக்கு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று முதல் நேர்காணல்

திருப்பூர், ஜன. 1:  தமிழக செய்தித்துறை அமைச்சரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் மற்றும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள நகர்மன்ற உறுப்பினர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கும், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக கழகத்திற்கு உட்பட்ட மாநகராட்சி (10 வட்டங்கள்), நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகர்மன்ற உறுப்பினர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுக்கு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கும் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

எனவே விருப்ப மனு கொடுத்தவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

அதன்படி இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை முத்தூர் பேரூராட்சிக்கும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வெள்ளகோவில் நகராட்சிக்கும் முத்து பழனியப்பா திருமண மண்டபத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை காங்கேயம் நகராட்சிக்கும், 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சென்னிமலை பேரூராட்சிக்கும், மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை தாராபுரம் நகராட்சிக்கும் திருப்பூர் தாராபுரம் சாலை பழவஞ்சிபாளையம் பிரிவில் உள்ள மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கத்திலும் நேர்காணல் நடக்கிறது.

இதுபோல் 3ம் தேதி காலை 9 மணி முதல் 9.30 மணி வரை ருத்ராவதி பேரூராட்சிக்கும், 9.30 மணி முதல் 11 மணி வரை கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கும், 11 மணி முதல் மதியம் 12 மணி வரை மூலனூர் பேரூராட்சிக்கும், 12 மணி முதல் 12.30 மணி வரை கன்னிவாடி பேரூராட்சிக்கும், 12.30 மணி முதல் 1 மணி வரை சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்கும், 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அவினாசி பேரூராட்சிக்கும், 4.30 மணி முதல் 6.30 மணி வரை பல்லடம் நகராட்சிக்கும், 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருப்பூர் மாநகராட்சிக்கும், திருப்பூர் தாராபுரம் சாலை பழவஞ்சிபாளையம் பிரிவில் உள்ள மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நேர்காணல் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: