×

நீலகிரியில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை

ஊட்டி,ஜன.1: நீலகிரி மாவட்டத்தில் இது வரை ஒமிக்ரான் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என கலெக்டர் அம்ரித் தெரிவித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நாடு முழுவதிலும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஒமிக்ரான் பரவ துவங்கியுள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மாநில எல்லைகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ஒமிக்கரான் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என கலெக்டர் தெரிவித்தார். கலெக்டர் அம்ரீத் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில எல்லைகளில் மருத்துவ குழுவினர் கொண்டு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் ஒமிக்ரான் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை, என்றார்.

Tags : Omigron ,Nilgiris ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...