ராஜஸ்தானி திருமண மண்டபத்தில் களைகட்டும் புத்தாண்டு, பொங்கல் ஜவுளி விற்பனை

கோவை, ஜன.1: கோவை, ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் உள்ள ராஜஸ்தானி சங்க திருமண மண்டபத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜவுளிகளுக்கான சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் ஏராளமான மாடல்களில் பல்வேறு ரக ஜவுளிகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ரெடிமேட் கார்மெண்ட்ஸ் வகைகள் பேண்ட், சர்ட், டீ- சர்ட், லோயர், பெர்முடாஸ், கேப்ரிடாப் ரூ.200 முதல் 350 விலையில் கிடைக்கிறது. பெண்களுக்கான புதிய டிசைன் சேலைகள் ரூ.150 முதல் ரூ.250 விலையில் விற்பனை செய்யப்படுகிறது மேலும் ரூ.4999 மதிப்புள்ள பெண்களுக்கான பிரீமியம் ஆடைகள் ரூ.350 முதல் 500 விலையில் கிடைக்கிறது.  

ஆண்களுக்கு பிரபல முன்னணி கம்பெனிகளின் பிரீமியம் ஆடைகள், பேண்ட், சட்டைகள்,டீ-சர்ட், லோயர்,பாபா சூட், குர்தீஸ்கள் ரூ. 499 முதல் 999 வரை விலையில் கிடைக்கிறது. ஆண், பெண் குழந்தைகளுக்கான ஆடைகள் ரூ. 150 முதல் 499 விலையில் கிடைக்கிறது. பெண்களுக்கு ஃபேன்ஸி டிரஸ், குர்தீஸ், லெக்கின்ஸ், டாப்ஸ், ஜீன்ஸ் பேண்ட், லேடிஸ் பைஜமா, பாபா சூட், ஃபேன்ஸி பிராக், சேலைகள் புல் ஓவர் ஜாக்கெட், என ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி ரகங்கள் புதிய டிசைன்களில் வந்துள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் டீசர்ட், ஆண், பெண் குழந்தைகளுக்கான காட்டன் ஜவுளி ரகங்கள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் நூர் கான் கூறியதாவது:

இந்தியாவின் மிகப்பெரிய மல்டி இன்டர்நேஷனல் பிராண்டர்டு கார்மெண்ட்ஸ்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து இந்த கண்காட்சியில் விற்பனை செய்வதால், வெளி ஷோரூம் கடைகளில் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யும் அனைத்து ஜவுளி ரகங்களும் எங்களிடம் ரூ.200 முதல் ரூ.350 வரை கிடைக்கிறது. மேலும், பெண்களுக்கான 2022ம் ஆண்டுக்கான லேட்டஸ்ட் டிசைன் சேலைகள், சுடிதார் உள்ளிட்ட பல்வேறு வகையான ஜவுளிகள் தற்போது வந்துள்ளது. அதையும் விற்பனைக்கு வைத்துள்ளோம். தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை நடைபெறுகிறது. வருகிற புதன்கிழமை வரை கண்காட்சி- விற்பனை நடைபெறும். கோவை மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: