ஈரோட்டில் 22 பேருக்கு கொரோனா தொற்று

ஈரோடு, ஜன. 1: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 759 ஆக உள்ளது. நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 38 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 622 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 426 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை 711 ஆக உள்ளது.

Related Stories: