மாவட்ட அளவிலான போட்டிகளில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவிகள் சாதனை

அருப்புக்கோட்டை: பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடந்த 12வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் போட்டிகள் நடந்தது. இதில் அருப்புக்கோட்டை எஸ்பிகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 12ம் வகுப்பு மாணவி வித்யா கட்டுரை போட்டியிலும், வைணவி ஒருவர் முழக்கப் போட்டியிலும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளையும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளிச் செயலாளர் கனகராஜ், பள்ளித் தலைவர் செந்தில்முருகன், தலைமை ஆசிரியை தங்கரதி ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: