தேவகோட்டை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

தேவகோட்டை: தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர்  பிர்லா கணேசன் தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய துணைத்தலைவர் ராசாத்தி நடராஜன், ஆணையாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் பேசுகையில், `கொரோனா பெருந்தொற்று மழைக்காலத்தில் குறைவாக பரவி வந்த நிலையில் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தினசரி தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாம் அனைவரும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்’ என பேசினார். வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் மாலதி மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: