ஓசூரில் இன்று மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கூறியிருப்பதாவது: ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், இன்று (31ம் தேதி) காலை 11 மணிக்கு சென்னீஷ் மஹாலில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகிக்கிறார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிப்பர். இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, உள்ளாட்சித் தேர்தல், கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து பேசப்படுகிறது. எனவே இந்த கூட்டத்தில் அனைத்து திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அவர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: