மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

தர்மபுரி: கொரோ னா,  ஓமைக்ரான் தொற்று எதிரொலியாக தர்மபுரி மாவட்டத்தில், ஆங்கில புத்தாண்டு இன்று இரவு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது குறித்து தர்மபுரி மாவட்ட எஸ்.பி.கலைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா மற்றும் ஓமைக்ரான் ஆகிய நோய் தொற்று பரவல் எதிரொலியாக இன்று (31ம் தேதி) இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே புத்தாண்டு கொண்டாடும் பொருட்டு, கூட்டம் கூடினாலோ, கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்கும் விதத்திலோ எவ்வித செயல்பாடுகளாக இருப்பினும் தடைவிதிக்க பட்டுள்ளது. எனவே அன்றிரவு தர்மபுரி மாவட்டத்தின் எப்பகுதியிலும், மக்கள் கூட்டம் கூடாமல் அவரவர் வீடுகளில் தங்கியிருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலம் சென்று புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது மற்றும் இரு சக்கர வாகனங்களில் பந்தயத்தில் செல்வது போல வேகமாக செல்வது, உற்சாகமாக புத்தாண்டை வரவேற்பதாக கருதி கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சரா கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது போன்ற அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இத்தடை உத்தரவை மீறி செயல்படுவோர் மீது, காவல் துறை கடுமையானநடவடிக்கை மேற்கொள்வதுடன், விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களும் பறிமுதல்செய்யப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. வரவிருக்கின்ற புத்தாண்டு (2022) நோயில்லா உலகினை அளிக்க வேண்டும் என்ற அக்கரையுடன் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் இதற்கு தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: