புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் வர்த்தக ரீதியிலான நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்

திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷ்னர் வனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;2022ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதையொட்டி இன்று இரவு பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். வழிபாட்டுத்தலங்களில் அனைத்து நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டும். அதே போல் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும், இன்று இரவு போலீசார் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

மேலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், அதே போல் ரிசார்ட்டுகள், கிளப்புகளில் புத்தாண்டு வர்த்தக ரீதியிலான நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்து ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஹோட்டல் ஊழியர்கள் 2 தவணைகள் தடுப்பூசி செலுத்தியுள்ளாரா என ஹோட்டல் நிர்வாகம் கண்காணித்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.  கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு களியாட்டங்களில் ஈடுபட்டு தேவையற்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: