ஊட்டி - குன்னூர் சாலையில் தாறுமாறாக நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

ஊட்டி:  ஊட்டி - குன்னூர் - மேட்டுபாளையம் சாலை நீலகிரியை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் சாலையாக உள்ளது. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சேரிங்கிராஸ் முதல் தலையாட்டிமந்து வரை இரு புறமும் ஆங்காங்கே ஆட்டோ, கார், ஜீப் மற்றும் லாரி போன்ற கனரக வாகனங்களை நிறுத்தி விடுவதால் சாலை குறுகி வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இருபுறமும் நிறுத்தி விடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது மட்டுமில்லாமல் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சேரிங்கிராஸ் முதல் தலையாட்டிமந்து வரை சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: