ஈரோடு: புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அத்துமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இது குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சட்டத்தை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இதே போல அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைளில் ஈடுபடக்கூடாது.