×

கல்வி மாவட்டத்தில் 3ம் பருவ பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பு பணி தீவிரம்

ஈரோடு: ஈரோடு கல்வி மாவட்டத்தில் 3ம் பருவ பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் வரும் ஜனவரி 3ம் தேதி திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறந்ததும் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்காக ஈரோடு முதன்மை கல்வி அலுலவகத்தில் இருந்து ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி ஆகிய 5 கல்வி மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், ஈரோடு கல்வி மாவட்டத்திற்கான 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள் ஈரோடு காவிரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஈரோடு கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கு நேற்று பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்தது.

முன்னதாக பள்ளி ஆசிரியர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, டோக்கன் வாரியாக ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட புத்தங்கள் வழங்கப்பட்டன. இன்று (31ம் தேதி) நடுநிலைப்பள்ளிகளுக்கான பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...