×

ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியில் மாற்றத்தை கொண்டு வருவோம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர், ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியில், மாணவர்கள் இடையே உள்ள செல்போன் மோகத்தையும், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி உயிரை இழக்கும் மாணவர்களின் பரிதாப நிலையை முற்றிலும் மாற்றி, ஆரோக்கியமான கல்வி சூழலுக்கு மட்டும் செல்போனை பயன்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தற்போது, இந்தியாவில் நடத்தப்படும் ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் செல்போனில் முழுமையாக மூழ்கியுள்ளனர்.  இதை சிறிது, சிறிதாக மாற்றவும், மாணவர்களிடேயே உள்ள செல்போன் மோகத்தையும், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி உயிரை இழக்கும் மாணவர்களின் பரிதாப நிலையை முற்றிலும் மாற்றவும், ஆரோக்கியமான கல்விச் சூழலுக்கு மட்டும் செல்போனை பயன்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன், மாற்றத்தைக் கொண்டு வருவோம் டிஎப்சி மாணவர்களால் என்ற தலைப்பில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சி மூலம் பல்வேறு ஆரோக்கியமான தமிழர் விளையாட்டுக்கள், யோகா, உடற்பயிற்சி, அறிவு சார்ந்த கலை நிகழ்ச்சிகள், ஓவியம், சிற்பம் உள்பட பல்வேறு நிகழ்வுகளை செல்போன் இன்றி நிகழ்த்திக் காட்டப்பட்டது.

செல்போன் பயன்பாட்டை குறைத்து, அனைத்து பள்ளி மாணவர்களும், கல்வியிலும், ஒழுக்கத்திலும், மிகச் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்ற டிஎப்சி குழுவினர் தெரிவித்தனர். பல்வேறு மாணவர்கள், இந்நிகழ்ச்சி மூலம் கல்வியில் முழு கவனம் செலுத்துவதாகவும், பெற்றோர்களும் செல்போன் பயன்படுத்துவதை குறைத்து கொண்டு குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவு செய்வதாகவும் கூறப்படுகிறது.

Tags : Sriniketan Matriculation ,
× RELATED ஸ்ரீநிகேதன் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்