பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் நடந்தது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி உத்தரவின்பேரில் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் ஆலோசனைப்படி, பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம், ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் சி.ஜே.சீனிவாசன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பி.இரவிந்திரநாத் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

குறிப்பாக ஒன்றியத்தில் அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க நிர்வாகிகள் ஆர்வமாக செயல்பட வேண்டும். மாவட்டத்தில் பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றியத்தில் அதிகளவில் புதிய உறுப்பினர் சேர்க்கை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல், மறைந்த கா.அன்பழகன் பிறந்தநாள் விழா ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடி நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும் என ஒன்றிய பொறுப்பாளர் சி.ஜே. சீனிவாசன் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.

ஒன்றிய நிர்வாகிகள் திருமலை லோகநாதன், வெங்கடபெருமாள், முத்து, கொளத்தூர் கோபி, சங்கன்னா, ஆஞ்சநேயன், சேகர், தலைமை கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி, திருமால் ராஜபேட்டை ரவிச்சந்திரன்,  ஜெயராமன், ஏ.கே.ரவி, பள்ளிப்பட்டு பேரூர் முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் உள்பட வடக்கு ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல், ஆர்கே பேட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் நடந்த ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பி.பழனி தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நிர்வாகிகள் சத்யராஜ், சுப்பிரமணி, மேகநாதன், நீலகண்டன், கோபால், சிவசங்கரன், சுகுணா மூர்த்தி, பிரமிளா வெங்கடேசன், ரவி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: