தோட்டக்கலை துறை சார்பில் மாடி தோட்டம் அமைக்க விதை வினியோகம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த   காவனூர் புதுச்சேரி கிராமத்தில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை மற்றும் சர்வோ சக்தி  பெண்கள் கூட்டமைப்பு இணைந்து  வீட்டில் மாடி தோட்டம் அமைப்பதற்கு விதை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சாமுண்டீஸ்வரி ராஜா தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் முனியாண்டி, சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்வோ சக்தி பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகி கலைச்செல்வி வரவேற்றார்.

இதில், தோட்டக்கலை துறை சார்பில் மூலிகை செடிகள் வளர்ப்பதன் அவசியம், செடிகள் வளர்க்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது மேலும் வேளாண் துறையில் தமிழக அரசால் வழங்கக்கூடிய மானியங்கள் அதை பெறும் வழிமுறைகள் குறித்து கூறி, அனைத்து பொதுமக்களும் பயன் பெற வலியுறுத்தப்பட்டது. மேலும், வீட்டில் மாடி தோட்டம் அமைக்க காய்கறி, கீரை விதைகள், மூலிகை செடிகள் வழங்கப்பட்டன.

Related Stories: