வரம்பனூர் கிராமத்தில் சிறப்பு பட்டா மாற்றம் முகாம்

வேப்பூர், டிச. 31: வேப்பூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட வரம்பனூர் கிராமத்தில் மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுளா தலைமையில் சிறப்பு பட்டா மாற்ற முகாம் நடைபெற்றது. இதில் வரம்பனூர், மன்னம்பாடி, தே.புடையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்  கலந்துகொண்டு நில பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா மாற்றம், உட்பிரிவு மாற்றம், வாரிசு சான்று, சிறு விவசாயி சான்று  உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் நேரடி பட்டா மாற்ற‌ம் பெறப்பட்ட 5 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர்‌ காஞ்சனா, கிராம நிர்வாக அலுவலர் அருள்பிரகாசம், நில அளவையாளர்‌ அமுதா   உள்ளிட்டோர் ‌கலந்து கொண்டனர்.

Related Stories: