வடக்கு மேலூரில் முன்னாள் ஊராட்சி தலைவர் உருவ படம் திறப்பு

நெய்வேலி, டிச. 31: நெய்வேலி அடுத்த வடக்குமேலூர் தெற்கு தெருவை சேர்ந்த வடக்கு மேலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராசு படத்திறப்பு நிகழ்ச்சி வடக்கு மேலூர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

தங்கராசு மகன்கள் சுப்பிரமணியன், கோவிந்தராஜ், ஜோதி ராஜேந்திரன், ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில், தங்கராசு திருவுருவ படத்தை நெய்வேலி சபா ராஜேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: