×

கோட்டாட்சியரிடம் பாமக புகார் மனு

விருத்தாசலம், டிச. 31: விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்தில் 21 வார்டுகள் உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், திமுக 7, அதிமுக 7 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், சுயேட்சை 4 இடங்களிலும், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. பாமக- வை சேர்ந்த செல்வி ஆடியபாதம் ஒன்றிய குழுத் தலைவராகவும், அதிமுகவை சேர்ந்த ஜான்சிராணி தங்கராசு என்பவர் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, திமுக கவுன்சிலர்கள், ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு, எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர வலியுறுத்தி, விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரிடம் கடந்த 27-ம் தேதி மனு அளித்தனர். அதில் அதிமுக 16-வது வார்டு கவுன்சிலரான வள்ளி சந்திரசேகர் பெயரும், 15-வது வார்டு பாமக கவுன்சிலராக செல்வகுமார் என்பவரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக நேற்று பாமக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் செல்வி ஆடியபாதம் மற்றும் 15-வது வார்டு பாமக கவுன்சிலர் செல்வகுமாரும், அம்மனுவில் கையெழுத்து போடவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் ராம்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

Tags : Kottatsiyar ,
× RELATED பட்டா வாங்கி தருவதாக பணம் வசூல் பழநி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் புகார்