வடலூர் காவல் நிலையத்தில் கடலூர் எஸ்பி ஆய்வு

குறிஞ்சிப்பாடி, டிச.  31: வடலூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலைய படைக்கலன், ஆவணங்கள் சரிபார்ப்பு போன்ற பணிகளை மேற்கொண்டார். காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரோந்து பணிகள், கண்காணிப்பு பணிகள் ஆகியவற்றை  தீவிரப்படுத்துதல் மூலம் குற்றங்களை தடுக்க வேண்டும். பணியின் போது பொதுமக்களிடம் நல்லுறவைப் பேணி காக்க வேண்டும். கொரோனா தொற்று காலமென்பதால் பொதுமக்கள் கூட்டம் போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என அறிவுரை கூறினார். மேலும், காவல்நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், காவலர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.இதில், நெய்வேலி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஆய்வாளர் வீரமணி, உதவி ஆய்வாளர் ஜெயதேவி மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: