நெல்லையில் ஜன.3ல் கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆவுடையப்பன் தகவல்

நெல்லை, டிச. 31:  நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து  நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், எனது தலைமையில் வருகிற 3ம் தேதி மாலை 4 மணியளவில் பாளை. பிபிஎல் திருமண மண்டபத்தில் நடக்கிறது. அமைச்சரும், திமுக மாநில தேர்தல் பிாிவு இணை தலைவருமான ராஜகண்ணப்பன் பங்கேற்று பேசுகிறார். ஞானதிரவியம் எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள்,  தலைமை  செயற்குழு, பொதுக்குழு  உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதிகள், மாநில, மாவட்ட,  ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு உள்ளிட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு அளித்தவர்கள், வாக்குச்சாவடி குழு முகவர்கள், திமுகவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துகளை வழங்குகின்றனர். நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள 3 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் முழுமையான வெற்றி பெற்றிட வியூகம் வகுக்கும் வகையில் நடக்கும் மாவட்ட  திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

Related Stories: