×

மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூர், டிச. 31: திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 86 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் வழங்கினார். திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருவாரூர் ஒன்றியம் புதுப்பத்தூர் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா மற்றும் ஆர்டிஓ பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். பின்னர் 58 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாவிற்கான உத்தரவும், 30 பயனாளிகளுக்கு முதியோர் முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவையும் வழங்கி மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் பேசினார். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, தாசில்தார் அன்பழகன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கருணாகரன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கணேசன், ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : People Interview Camp ,
× RELATED சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குப்பதேவன்...