மன்னார்குடி வட்டத்தில் 70,543 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

மன்னார்குடி, டிச. 31: மன்னார்குடி தாலுகாவில் 70543 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பில் வைக்கப்பட உள்ள 21 வகையான பொருட்களை மாவட்ட வருவாய் ஆய்வாளர் சிதம்பரம் நேற்று ஆய்வு செய்தார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழ்நாட்டின் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 4ம் தேதி சென்னையில் தொடங்கி வைக் கிறார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ள 70 ஆயிரத்து 543 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 115 கடைகள் வாயிலாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் வரும் 4ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்கு தேவையான தொகுப்பில் வைக்கப்பட உள்ள 21 வகையான பொருட்கள் மன்னார்குடி அடுத்த சுந்தரக்கோட்டை யில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தானிய கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றை பாக்கெட்டில் அடைத்து பொங்கல் பரிசு தொகுப்பாக தயாரிக்கும் பணிகள் துரிதமாக நடந்து வரு கிறது. இந்த பணிகளை மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமானதாக உள்ளதா, அளவு சரியாக உள்ளதா என்று அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து குறிப்பிட்ட காலத்துக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தர ஆய்வாளர் ராஜப்பா மற்றும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Related Stories: