பொன்னமராவதி, டிச.31: பொன்னமராவதி பேரூராட்சியில் பேரூராட்சிகள் ஆணையர் கோபால் ஆய்வு செய்தார். பொன்னமராவதி பேரூராட்சிகள் கோபால் ஆணையர் பொன்னமராவதி பேரூராட்சியில் சந்தைப்பகுதி, மலையாண்டிகோயில், பேருந்துநிலையம் மற்றும் திடக்கழிவு மேம்பாட்டுத் திட்டத்தில் குப்பைகளை பிரித்து வாங்கும் டிஜிட்டல் கார்டு பெறும் முறைகளை ஆய்வு செய்தார். இதில் பொன்னமராவதி பேரூராட்சி செயல்அலுவலர் கணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.