×

சுங்கான்கடை மலையில் 2ம் நாளாக தீ

நாகர்கோவில், டிச.31: குமரி மாவட்டத்தில் சுங்கான்கடை பகுதியில் உள்ள மலையில் அடிக்கடி தீ பிடித்து எரிவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் இதனை போன்று தீ பிடித்து எரிந்தது. அந்த பகுதியில் உள்ள புல் புதர்கள், மரங்கள் எரிந்து சாம்பலாகின. தீ பிடித்து எரிவது தொடர்பாக நாகர்கோவிலில் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மலையடிவாரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தீ வராமல் தடுக்கும் வகையில் இலை தழைகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் சென்று தீயணைக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 மேலும் இது தொடர்பாக வனத்துறையினருக்கும் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். மலை பகுதியில் அத்துமீறி நுழைகின்றவர்கள் சமையல் செய்வது, புகைபிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது இது போன்று தீ பிடிக்கும் என்றும், மூங்கில், புல் வகைகள் உரசினால் கூட தீ பிடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தீ பற்றி எரிந்துகொண்டிருந்த வேளையில் பார்வதிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றவர்கள் அதனை பார்த்தவாறு சென்றனர். சிலர் வாகனங்களை நிறுத்தி விட்டு தீ எரிவதை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

Tags : Sungankadai hill ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...