மேட்டூர் அணை பூங்காவில் பார்வையாளர்களுக்கு 3 நாட்கள் தடை

மேட்டூர்: மேட்டூர் சப் கலெக்டர் வீர்பிரதாப்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஸ்டான்லி அணையின் பூங்கா மற்றும் அணையை பார்வையிடுவதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது, ஆங்கில வருடப்பிறப்பு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக உள்ளதால், இத்தினங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு பொதுமக்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றும் மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில் பரவி வருவதால் பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, நாளை (31ம் தேதி), ஜனவரி 1ம் தேதி மற்றும் 2ம் தேதி ஆகிய தினங்களுக்கு மேட்டூர் அணை பூங்காவை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு சப் கலெக்டர் வீர்பிரதாப்சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories: