மஞ்சப்பை திட்டம் குறித்து மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பல கடைகளில் பொருள் வாங்க வரும் பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்றது.

இது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் கூறுகையில், ‘‘மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கடைகளுக்கு வரும்போது துணிப்பைகளை எடுத்து வருவதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது குறைகிறது.இதனால் இயற்கை,மண் மாசடைவது தடுக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. எனவே நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்களாகவே முன்வந்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தில் வெற்றிகரமாக செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Related Stories: