திருச்சியில் இன்று அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வரை வரவேற்க அணி திரண்டு வாருங்கள்

திருச்சி, டிச.30: திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி தமிழகத்தின் முதன்மை மாவட்டம் என்ற நிலையை அடையும் வகையில் ரூ.1,084 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா, திருச்சி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா, சத்திரம் பேருந்து நிலையம் காணொலி வாயிலாக திறந்து வைப்பு, ஆயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றும் நிகழ்ச்சி, திருச்சி தாயனூர் கேர் கல்லூரியில் இன்று (30ம் தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டோல்கேட் சுற்றுலா மாளிகையிலிருந்து தாயனூர் கேர் கல்லூரிக்கு வரும் வரை வழியெங்கும் வரவேற்பு அளிக்கும் விதமாக திருச்சி மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்,  கிளைக்கழக நிர்வாகிகள்,  முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், செயல்வீரர்கள், கழக முன்னணியினர், பொதுமக்கள் என அனைவரும் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளிப்பதோடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: