×

ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நன்றி

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை: சொல்வதை தான் செய்வோம் செய்வதைதான் சொல்வோம் என் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கூற்றிற்கு ஏற்ப கலைஞரின் மறுவுருவமாக அரசு ஊழியர்களின் காவலராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார்.  சட்ட பேரவையில் அறிவித்தவாறு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஜனவரி 1 ம் தேதி முதல் அகவிலைபடி உயர்த்தப்படும் என அறிவித்தார். அதே போன்று அறிவித்துள்ளார்.

நான் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சூளுரைத்து எங்களை கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்து ஆட்சிக்கு வந்தவுடன் போராட்டக்கால வழக்குகள் ரத்து, துறைரீதியான நடவடிக்கைகள் ரத்து, போராட்டக்காலத்தை பணிக்காலமாக அறிவித்தல், பதவிவுயர்வு தடைபெற்றிருந்தால் பதவி உயர்வு வழங்க ஆணை, பணி இடமாற்றம் செய்தவர்களை அதே இடத்தில் பணிவழங்க பொது இடமாறுதலில் முன்னுரிமை இதே நிலையில் தான் கொரோனா கொடுந்தொற்றினால் நிதிநிலை  சரியில்லை என்றாலும், இன்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 14% விழுக்காடு அகவிலைபடியை உயர்த்தியும் பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ 3.000 சிறப்பு காலமுறை ஊதியருக்கு ரூ 1000 ,ஓய்வூதியருக்கு ₹500 வழங்கி அரசு ஊழியர்கள் தான் அரசு, அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசு இல்லை என்ற தனது இதயத்தில் இருப்பதை இன்று உலகறிய செய்துள்ள முதலமைச்சருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Teachers Welfare Federation ,
× RELATED நாளை டிஜிபி வளாகத்தில் நடைபெறும்...