×

ஊத்துக்கோட்டையில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்: எம்எல்ஏ கோவிந்தராஜன் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்றார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூர் திமுக சார்பில், பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இதில், பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் சம்சுதீன், முன்னாள் பேரூர் செயலாளர் குமரவேல் ஆகியோர் வரவேற்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.வி.ராமமூர்த்தி, அபிராமி குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், ஆ.சத்தியவேலு, ரவி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி,  அன்புவாணன், ரவிக்குமார், கேவி.லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி திமுக உறுப்பினர் படிவத்தை நிர்வாகிகளிடம்  வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகின்ற பேரூராட்சி வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர்களை 15 வார்டுகளிலும் வெற்றி பெறச்செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

இதில், துணைச்செயலாளர் பார்த்திபன், வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதிகள் மோகன், நெடுஞ்செழியன், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் தமிழ்செல்வம், கோல்டு மணி, ஜீவா, வக்கீல் சீனிவாசன், சாந்தி, ஏனம்பாக்கம் சம்பத், நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் இளைஞரணி அமைப்பாளர் ரகீம் நன்றி கூறினார்.

Tags : DMK General Members Meeting ,Uthukottai ,MLA ,Govindarajan ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...