×

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் ரத்ததான முகாம்

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது. கல்லூரி இயக்குனர் மணி தலைமை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் விஜயராஜ், பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர் முன்னிலை வகித்தனர். கலை மற்றும் அறிவியல் முதல்வர் மதன்பெரியசாமி வரவேற்றார்.

மாமல்லபுரம் லயன்ஸ் கிளப் தலைவர் மதிபிரகாஷ், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் இலக்கியா, குணாநிதி ஆகியோர் ரத்ததானத்தின் பயன்குறித்து விளக்கி பேசினார். முகாமில் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர். இதில், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags : Thalakshmi Seenivasan College ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...