×

ஆறுமுகநேரியில் பாஜ செயற்குழு

ஆறுமுகநேரி, டிச. 30: ஆறுமுகநேரியில் பாஜ சார்பில் நகர செயற்குழு கூட்டம் நகரத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நகர பொதுச்செயலாளர் முருகேசபாண்டியன் முன்னிலையில் நடந்தது. வர்த்தக பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக ஓபிசி மாவட்டத் தலைவர் தங்கபாண்டியன் வரவேற்றார். இதில் மாவட்ட துணைத்தலைவரும், நகர பார்வையாளருமான தங்கம், நகர பொருளாளர் ஹரிஷ் குருசாம்ராட் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், பேரூராட்சி பகுதிகளில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஆறுமுகநேரி பஜாரில் பொதுமக்களுக்கு இடையூறாக காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.  ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு எதிரே மலைப்போல் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.

Tags : BJP Executive Committee ,Arumuganeri ,
× RELATED சாகுபுரம் அருகே ஆபத்தான வளைவு பாலத்தில் அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா?