அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ஆலோசனைகூட்டம்

நெல்லை,டிச.30: பாளையில் அனைத்து இந்திய ஆசிரியர் பேரவை ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் லோகநாதன், துணை பொதுச்செயலாளர் பாஸ்கர சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுசெயலாளர் பாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் மாநில பொதுசெயலாளராக பாபு, மாநில தலைவராக மணிகண்டன், மாநில பொருளாராக லோகநாதன் புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் சிபிஎஸ் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும். 2004-2006ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கிய நீதிமன்ற ஆணையை அரசு உடன் நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 2 ஆண்டாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கான பணிபாதுகாப்பு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Related Stories: