வியாபாரிகள் சங்க கூட்டம்

நெல்லை, டிச.30: நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிர்வாகக்குழு கூட்டம் டவுனில் நடந்தது. சங்க தலைவர் முகமதுயூசுப் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் நாராயணன், முகமதுஹனீபா, சம்சுதீன், செயலாளர் ஜவஹர், கான்முகமது, ஆதிமூலம், செய்யதுஅலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் முகமதுயூசுப் தீர்மானங்களை முன்மொழிந்தார். கூட்டத்தில், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களின்போது இரவில் கூடுதல் நேரம் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய காவல்துறை வழிவகை செய்வதோடு, வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். புதிதாக பரவும் ஒமிக்ரானை தடுக்கும் வகையில் வணிகர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கை, கால்களை சுத்தமாக வைத்து வியாபாரம் செய்ய வேண்டும். பழையபேட்டை செல்லும் சாலையில் கண்டியப்பேரி விலக்கில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை மாநகராட்சி நிர்வாகம் சீர்செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தளவாய், ஜயப்பன், மாரியப்பன், லெக்‌ஷ்மணன், வீரவேல், அருள்தாஸ், வின்சுப்பிரமணியன், ராமச்சந்திரன், முகம்மதுசித்திக் மற்றும் நிர்வாகிகள் அப்துல்ரஹ்மான், ஹக்கீம் (எ) கழுந்துபாய், மீரான்மைதீன், ஷாகுல்ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். மாரியப்பன் நன்றி கூறினார்.

Related Stories: