சதக்கத்துல்லா கல்லூரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நெல்லை, டிச.30: பாளை சதக்கத்துல்லா கல்லூரியில் தமிழ்த்துறை, வேலைவாய்ப்புத்துறை, சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகாடமி இணைந்து இளம் தலைமுறையினருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது. அரபுத்துறை பேராசிரியர் அப்பாஸ் அலி இறைவாழ்த்து பாடினார். தமிழ்துறைத்தலைவர் மகாதேவன் வரவேற்றுப்பேசினார். கல்லூரி முதல்வர் முஹம்மது சாதிக் தலைமையுரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் எல்.கே.எம்.முஹம்மது நவாப் ஹுசைன், மதிதா இந்துக்கல்லூரி முன்னாள் வணிகவியல் துறைத்தலைவர் சிவசுப்பிரமணியன், இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் சேக் சிந்தா, வேலைவாய்ப்புத்துறை பேராசிரியர் ப்ரியா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மஜிதாபர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகாடமி ஜெய்லானி மதார், கல்லூரி துணை முதல்வர் செய்யது முகம்மது காஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேலைவாய்ப்புத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் அறிமுகவுரையாற்றினார். விழாவில், நெல்லை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் ஜாஹாங்கீர் பாஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறை இணைபேராசிரியர் அயூப்கான் நன்றி கூறினார்.

Related Stories: