அகவிலை படியை உயர்த்தி முதல்வர் அறிவிப்பு

நீடாமங்கலம், டிச. 30: தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் நேற்று நீடாமங்கலத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி. தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பு என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழக அரசின் நிதிநிலை பற்றாக்குறை என்ற சூழ்நிலையில் கூட இந்த அறிவிப்பு என்பது ரொக்கமாக கையில் கிடைப்பதால் அனைத்து அரசு ஊழியர் மத்தியில் எண்ணற்ற மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் பாண்டியன் உடன் இருந்தார்.

Related Stories: