×

கும்பகோணத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி


கும்பகோணம், டிச.30: கும்பகோணத்தில் மாநில அளவிலான கைத்தறி விற்பனை கண்காட்சியை அரசு கொறடா கோவி.செழியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் மாநில அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் கிரிஜாராஜ் தலைமையில், எம்.பி.ராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் முன்னிலையில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் தொடங்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், வேலூர், திருச்செங்கோடு, விருதுநகர், சேலம், திருநெல்வேலி, திருவாரூர், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கண்கவர் டிசைன்களில் அசல் ஜரிகை பட்டு புடவைகள், ஆபைன் ஜரிகை பட்டு புடவைகள், காட்டன் புடவைகள், வேஷ்டிகள், போர்வைகள் பலவண்ண படுக்கை விரிப்புகள், துண்டுகள், கைலிகள் ஆகியவை விற்பனைக்கு உள்ளன. பருத்தி ரக ஜவுளிகளுக்கு 30% அரசு தள்ளுபடியும், பட்டு ரக ஜவுளிகளுக்கு 10% சங்க கழிவுடன் 30% அரசு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பட்டு ரக துணிகளுக்கு 15% முதல் 65% சிறப்புக் கழிவு வழங்கப்படுகிறது. கைத்தறி கண்காட்சி ஜனவரி 12ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறும். மேலும், கண்காட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கைத்தறி ஆடைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அரசு கொறடா கோவி செழியன் தெரிவித்தார்.

Tags : Handloom ,Kumbakonam ,
× RELATED சேத்தியாத்தோப்பில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசு கட்டிடம்