திருமயம் அருகே பைக் மீது கார் மோதி சிறுவன் பரிதாப சாவு

திருமயம். டிச.30: திருமயம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வந்தவாசி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு (27), கருப்பையா மகன் குணசேகரன் (16). இவரது தம்பி வீரசங்கர் (14) ஆகியோர் டூவீலரில் மலைக்குடிப்பட்டியில் உள்ள சலூன் கடைக்கு வந்தனர். அப்போது கும்பகோணத்திலிருந்து பிள்ளையார்பட்டி நோக்கி மதுரை பைபாஸ் சாலையில் சென்ற கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த வீரசங்கர், கருப்பு ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து திருமயம் இன்ஸ்பெக்டர் கவுரி வழக்கு பதிந்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவர் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: