×

ஊராட்சிகளின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் மண் சட்டி கையில் ஏந்தி போராட்டம்

சீர்காழி, டிச.30: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவர் அகோரம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் மரகதம் அகோரமூர்த்தி, அஞ்சம்மாள், மதியழகன், தாமரைச்செல்வி திருமாறன், தனலட்சுமி அன்பழகன், அலெக்சாண்டர் முன்னிலை வகித்தனர். செம்மங்குடி ஊராட்சி தலைவர் அசோகன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசின் 15வது நிதி மானிய குழு அந்தந்த ஊராட்சிகளுக்கு 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் 15வது மானிய நிதியை கிராம ஊராட்சியின் வளர்ச்சியை தவிர வேறு எந்த திட்டத்திற்கும் ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதியின்றி வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை இன்றைய மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதியத்தை தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.

அரசு வழிகாட்டுதல் நெறிமுறையின் அடிப்படையில் பணித்தள பொறுப்பாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும், ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது, ஊராட்சிகளுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை ஊராட்சியின் வளர்ச்சி பணிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன இதில். ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயன் மாலினி முருகன், தட்சிணாமூர்த்தி, வசந்தி, சரளா, மற்றும் ஒவ்வொரு ஊராட்சி நூறு நாள் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Panchayat Leaders' Coalition ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு