×

புதுச்சேரியில் புதிதாக 12 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, டிச. 30: புதுச்சேரியில் புதிதாக 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 2,390 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 11, மாகே- 1 என மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால், ஏனாமில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை. இதுவரை 1,880 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 20,43,339 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 17,32,447 நெகட்டிவ் என முடிவு வந்துள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,29,446 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 18 பேரும், அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 7 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வீடுகளில் 85 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 120 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 11 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,27,446 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Pondicherry ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...