திரவுபதியம்மன் கோயிலில் சிறப்பு மண்டல பூஜை

முஷ்ணம், டிச. 30:    முஷ்ணம் மங்காங்குளத்தெருவில் விநாயகர், திரவுபதியம்மன், மகாகாளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, நேற்று 28ம் தேதி சிறப்பு மண்டல பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, சாமி அலங்கரிக்கப்பட்டு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம்  வழங்கப்பட்டது.  மாலை திரவுபதியம்மன், அர்ச்சுனன் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு மங்காங்குளத்தெரு வழியே வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியே வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா தங்க.ஆனந்தன், தெருவாசிகள், இளைஞர்கள் ஆகியோர் முன்னின்று செய்திருந்தனர்.

Related Stories: