×

பேரணாம்பட்டு தலைக்காட்டில் நில அதிர்வு ஏற்பட்ட இடத்தில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

குடியாத்தம், டிச.30: பேரணாம்பட்டு தலைக்காட்டில் நில அதிர்வு ஏற்பட்ட இடத்தில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் கடந்த மாதம் தொடர்ந்து 3 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் ஒரு வீட்டில் விரிசல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதிமக்கள் பீதி அடைந்துள்ளனர். பின்னர், பேரணாம்பட்டு அடுத்த டி.டி.மோட்டூர், கமலாபுரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 3 முறை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியில் கடந்த வாரம் தொடர்ந்து 3 நாட்களாக பயங்கர சத்தத்துடன் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இதில், 5க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரைக்காடு பகுதியில் 25க்கும் மேற்பட்டோர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வருவாய் துறையினர் உணவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியில் மத்திய புவியியல் ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, நில அதிர்வு குறித்து முழு தகவல் அறிக்கையை மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியனிடம் சமர்ப்பிப்பதாகவும், அடுத்த கட்ட ஆய்வு மேற்கொள்ள விரைவில் வருவதாகவும் தெரிவித்தனர். ஆய்வின்போது உதவி புவியியல் ஆராய்ச்சியாளர் சிவகுமார், துணை புவியியல் ஆராய்ச்சியாளர் ஜெர்ரிப்அனிஷ் தாகூர், விஐடி பல்கலைக்கழக புவியியல் ஆராய்ச்சி மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியர் கணபதி, வருவாய் கோட்டாட்சியர் தனஜெயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Peranampattu ,
× RELATED வேனுடன் 210 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி,...