×

காட்பாடியை சேர்ந்த செக்யூரிட்டியிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ₹1.75 லட்சம் அபேஸ் செய்த மர்ம ஆசாமி சைபர் கிரைம் மூலம் ₹1.26 லட்சம் மீட்டு எஸ்பி வழங்கினார்

ேவலூர், டிச.30: காட்பாடி கரிகிரியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் தனியார் பல்கலைக்கழகத்தில் செக்ரிட்டியாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் இந்தியன் வங்கியில் சொந்த தேவைக்காக ₹2.50 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அந்த தொகை அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாம். சிறிது நேரத்தில் ஒரு அழைப்பு வந்ததுள்ளது. அதில் பேசிய மர்ம நபர், ‘வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்கள் செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அதனை தெரிவிக்கவேண்டும்’ என கூறினார். அதனை நம்பி தேவராஜ், ஓடிபி எண்ணை தெரிவித்தார். அடுத்த நொடியில் அவரது கணக்கில் இருந்து ₹1.70 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் திடுக்கிட்ட அவர் வங்கிக்கு சென்று கேட்டபோது அவர்கள் எவ்வித விவரங்களையும் போனில் கேட்கவில்லை என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா, எஸ்ஐ சதீஷ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். பணத்தை மோசடி செய்த வங்கி கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கி அந்த வங்கி கணக்கில் இருந்த ₹1 லட்சத்து 26 ஆயிரத்து 231 ரூபாய் 87 பைசாவை மீட்டனர். மீட்கப்பட்ட ₹1.26 லட்சத்தை எஸ்பி ராஜேஷ்கண்ணன் மூலம் நேற்று தேவராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சுந்தர்மூர்த்தி, இன்ஸ்பெக்டர் அபர்ணா, எஸ்ஐ சதீஷ் உட்பட பலர் உடன் இருந்தனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘நாளுக்குநாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் உஷராக இருக்க வேண்டும். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி தொடர்பான எண்ணுகளை கேட்டால் யாரிடம் வழங்க கூடாது. வங்கி ஆவண எண்கள், ஓடிபி எண்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது’ என்றனர்.

Tags : Marma Asami ,Katpadi ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...